LATEST NEWS
“யார் அந்த 5 மாதக் குழந்தையின் தந்தை..?” 50 வயது நிலக்கிழாரா..? 25 வயது வாலிபரா..? திருமணமாகாத கர்ப்பிணி பெண்ணின் மரணத்தில் நீடிக்கும் அவிழாத முடிச்சுகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் படாரா நகரில் உள்ள தோட்டம் ஒன்றில், 25 வயதான திருமணமாகாத தலித் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் வகிட்டில் உதட்டுச்சாயம், நெற்றியில் பொட்டு மற்றும் காலில் புதிய மெட்டி எனத் திருமணமான பெண் போன்ற அலங்காரங்கள் காணப்பட்டன. பிரேத பரிசோதனையில் அவர் விஷம் அருந்தி உயிரிழந்ததும், 5 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், அவரது நிலத்தின் உரிமையாளரான 50 வயது கோலே பாண்டே மற்றும் பெண்ணின் காதலனான ஃபதேபூரைச் சேர்ந்த பிரஞ்சூல் பால் ஆகிய இருவர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பிரஞ்சூல் பால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கோலே பாண்டேயைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையிலும் அழைப்பு விவரப் பதிவுகளிலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தை குத்தகைக்கு எடுத்த நிலத்தின் உரிமையாளரான கோலே பாண்டே, அப்பெண்ணுக்குக் கான்பூர் மெட்ரோவில் வேலை வாங்கித் தந்து தனியாக வீடு எடுத்துத் தங்க வைத்ததில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பிரஞ்சூலுடனும் அப்பெண்ணுக்குக் காதல் தொடர்பு உருவாகியுள்ளது. ஜூலை 11 அன்று பெண்ணின் கர்ப்பம் குறித்துத் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவம் நடந்த நாளன்று அப்பெண் பிரஞ்சூலிடம் 23 நிமிடங்களும், கோலேயிடம் 10 நிமிடங்களும் பேசியுள்ளார். பின்னர் விஷம் அருந்திய அப்பெண்ணைக் கோலே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரஞ்சூலிடம் அப்பெண் பணம் கேட்டதாகவும், தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும் கைது செய்யப்பட்ட பிரஞ்சூல் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் வயிற்றில் வளர்ந்த 5 மாதக் குழந்தையின் தந்தை யார் என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இதைக் கண்டறியும் பொருட்டு, குற்றம் சாட்டப்பட்ட கோலே பாண்டே மற்றும் பிரஞ்சூல் பால் ஆகிய இருவரிடமிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கருவின் டிஎன்ஏ உடன் ஒப்பிடப்படும் என்று உதவி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை வெளியாகும் போது மட்டுமே பிறக்காத குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதும், இந்தத் தற்கொலை அல்லது கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கமும் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
