LATEST NEWS
வீட்டில போய் அம்மாவிடம் கேட்டா தான் அப்பா யார்ன்னு தெரியும்… முதல்வர் குறித்து நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு.. பந்து புகார்…!!
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தான் அப்பா யார் என்று தெரியும்’ என்று பேசியிருந்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது தற்பொழுது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் வர்தினி என்பவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசியது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக அந்தப் புகாரில் அவர் விரிவாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
