“போராடுவது மாணவர்கள் அல்ல… அந்த ரவுடி வந்தபிறகு தான்… பின்னால் இருப்பது யார் தெரியுமா..? நயினார் நாகேந்திரன் கிளப்பிய அதிரடி புயல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போராடுவது மாணவர்கள் அல்ல… அந்த ரவுடி வந்தபிறகு தான்… பின்னால் இருப்பது யார் தெரியுமா..? நயினார் நாகேந்திரன் கிளப்பிய அதிரடி புயல்..!!

Published

on

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளும் சி.ஜே.பி-யும் இணைந்து நடத்துவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் இந்த அமைப்புகளுக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி இயங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரும் உண்மையான மாணவர்கள் கிடையாது என்று கூறிய அவர், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெரிய ரவுடி வந்த பிறகுதான் அங்கு வன்முறை வெடித்துள்ளதாகத் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் எதற்காகப் பாலஸ்தீன கொடியை ஏந்திப் பிடிக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

மக்களவையில் முக்கியமான மசோதாக்கள் கொண்டு வரப்படும் நேரங்களில் எல்லாம், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுப்பதாக அவர் சாட்டினார். டெல்லியில் தற்போது நடைபெறும் இந்தப் போராட்டம் தற்செயலானது அல்ல என்றும், திட்டமிட்டு நடத்தப்படும் இந்தச் செயல் ஒரு தேசத் துரோகம் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in