LATEST NEWS
செம சான்ஸ்..! ஸ்மார்ட்போன் வாங்குறீங்களா..? கூடவே 1 கிராம் தங்க நாணயத்தையும் அள்ளிக்கோங்க..! ‘தி சென்னை மொபைல்ஸ்’-ன் மெகா ஆஃபர்..!!
தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் ஒரு சிறப்பு ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் சொந்தமாக ஒரு கவிதை எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 1,000 பேருக்குத் தங்க நாணயம் வழங்கும் இந்தத் திட்டத்தின் முதல்கட்ட நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ‘தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகத் தங்க நாணயங்களை வழங்கிப் பாராட்டினார். ஆடி மாத சிறப்புச் சலுகை மூலம் தரமான ஸ்மார்ட்போன்களைச் சிறந்த விலையில் வழங்குவதோடு, வாடிக்கையாளர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாகத் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுத் தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்குத் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
