உங்களுக்கு மனசாட்சி இல்லையா..? ஜாலியா விசில் அடிச்சு படம் பாக்குறாங்க… தூத்துக்குடி லாக் அப் மரணத்தில் உயிரிழந்த அருணாச்சலத்தின் தாய் கண்ணீர் மல்க கதறல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்களுக்கு மனசாட்சி இல்லையா..? ஜாலியா விசில் அடிச்சு படம் பாக்குறாங்க… தூத்துக்குடி லாக் அப் மரணத்தில் உயிரிழந்த அருணாச்சலத்தின் தாய் கண்ணீர் மல்க கதறல்..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த இளைஞர் அருணாச்சலம் (26), காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அடித்ததால் தான் தன் மகன் உயிரிழந்தான் என கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு கதறிய அருணாச்சலத்தின் தாய் பரமேஸ்வரி, “உங்களுக்கு மனசாட்சி இல்லையா? ஜாலியா விசில் அடிச்சு படம் பாக்குறாங்க.. நாங்க பணத்தையா கேட்டோம், சொத்தையா கேட்டோம், என் பிள்ளைக்கு நீதிதானே கேட்டோம்” என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/sunnewstamil/status/2080564695367663661/video/1

Advertisement

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுவிட்டதாகவும், தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. உயிரிழப்பதற்கு முன்பு அருணாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, காவல்துறையினர் தன்னை கொடூரமாக தாக்கியதாகப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காவல்துறை அதிகாரிகள், அருணாச்சலம் காவல் நிலையத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாகவும், இது லாக்-அப் மரணம் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மஜிஸ்திரேட் விசாரணைக்கும், தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in