LATEST NEWS
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” நள்ளிரவில் கொட்டும் மழையில் கேப் டிரைவர் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த 3 பெண்கள்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்…!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில், பலத்த மழை பெய்து கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், வாடகை காரில் பயணம் செய்த மூன்று பெண் பயணிகளிடம் அவரது நண்பரையும் உடன் ஏற்றி “அட்ஜஸ்ட்” செய்யுமாறு ஓட்டுநர் வற்புறுத்திய சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் போது இந்த விசித்திர விபரீத நிகழ்வு நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
தனது காரில் போதுமான சிஎன்ஜி எரிபொருள் இல்லை என்றும், அதனால் தனது நண்பரை அவரது இடத்தில் விடுவதற்குத் தனியாகச் செல்ல முடியாது என்றும் அந்த ஓட்டுநர் பெண்களிடம் சமாதானம் பேசியுள்ளார். வெறும் ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே என்பதால் அவரது நண்பரை காரில் அனுமதிக்கக் கோரியுள்ளார். ஆனால், முன்பின் தெரியாத ஒருவருடன் தாங்கள் ஏன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றும், பயணத்தைத் தொடங்கும் முன்பே ஏன் இதைத் தெரிவிக்கவில்லை என்றும் அந்தப் பெண்கள் ஓட்டுநரை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். பெண்கள் மறுத்ததைத் தொடர்ந்து, “உங்களுக்கு விருப்பமில்லை என்றால் காரை விட்டு இறங்கி வேறு கேப் புக் செய்து கொள்ளுங்கள்” என்று நடுவழியிலேயே ஓட்டுநர் அராஜகமாகப் பேசியுள்ளார்.
பெண் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்து கொண்ட ஓட்டுநரின் இந்த நடத்தைக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “தனியார் வாடகை கார் என்பது புக் செய்த பயணிகளுக்கு மட்டுமே உரித்தானது, அதில் காலியிடங்கள் இருக்கின்றன என்பதற்காக ஓட்டுநர் தன் இஷ்டத்திற்கு யாரையும் ஏற்ற முடியாது” என்றும், “மழைக்காலத்தில் பெண்களை நடுரோட்டில் இறங்கச் சொன்ன ஓட்டுநரின் இந்த அட்டிடியூட் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
