“பட்ஜெட்டுக்கு ஏத்த சொகுசு இதுதான்” விமானத்தை விடுத்து இந்திய இரயிலில் ஏறிய வெள்ளைக்காரர்… வசதிகளைப் பார்த்து வியந்து பாராட்டிய தருணம்… வைரலாகும் வீடியோ…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பட்ஜெட்டுக்கு ஏத்த சொகுசு இதுதான்” விமானத்தை விடுத்து இந்திய இரயிலில் ஏறிய வெள்ளைக்காரர்… வசதிகளைப் பார்த்து வியந்து பாராட்டிய தருணம்… வைரலாகும் வீடியோ…!

Published

on

சமூக ஊடகங்களில் இந்திய இரயில்கள் குறித்துப் பல எதிர்மறையான மீம்களும் புகார்களும் பரவி வரும் நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சுற்றுலா வ்லாகரான ஆலி , இந்திய இரயில்வேயின் 2AC பெட்டியில் பயணம் செய்துள்ளார். தனது பயண அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ள அவர், இந்திய இரயிலின் 2AC பயணம் மிகவும் வசதியானது மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றது என்று பாராட்டியுள்ளார். வெளிநாட்டுப் பயணிகளிடையே இந்திய இரயில் பயணம் குறித்து இருக்கும் பழைய தவறான பிம்பங்களை உடைக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

ஆலி தனது வீடியோவில், 2AC பெட்டியின் ஒட்டுமொத்த வசதிகளையும் ஒவ்வொன்றாகக் காட்டியுள்ளார். அங்குள்ள தனிநபர் திரைச்சீலைகள் , சுத்தமான படுக்கை விரிப்புகள், தூங்குவதற்குக் கொடுக்கப்பட்ட படுக்கை வசதி (Birth) மற்றும் உடமைகளை வைப்பதற்கான இடவசதி ஆகியவை நீண்ட தூரப் பயணத்திற்கு மிகக் கச்சிதமாக இருப்பதாகப் புகழ்ந்துள்ளார். மிகக் குறைந்த மற்றும் மலிவான விலையில் இவ்வளவு சொகுசான வசதிகளும், தனிநபர் சுதந்திரமும் கிடைப்பது முற்றிலும் “பைசா வசூல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/Db5MWrQNGn1/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, இந்திய நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கும், தனியாகப் பயணம் செய்பவர்களுக்கும் (Solo Travelers) 2AC எப்போதுமே முதல் தேர்வு என்று இந்திய இளைஞர்கள் இந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். புதிய தலைமுறை வெளிநாட்டுப் பயணிகள் இப்போது விமானப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு, இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தையும், ஜன்னல் வழியே தெரியும் இயற்கை காட்சிகளையும் ரசிப்பதற்காக இந்திய இரயில்களைத் தேர்ந்தெடுப்பதை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in