LATEST NEWS
“ஹார்முஸ் நீரிணையில் பயங்கரம்..!” வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்… ஈரான் போட்ட ‘அந்த’ ஒரே கண்டிஷன்.. வெளியான பரபரப்பு தகவல்..!!
ஹார்முஸ் நீரிணையில் வழிகாட்டப்பட்ட பாதுகாப்பான எல்லையை மீறிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று, கடல் கண்ணிவெடியில் மோதி வெடித்தது. உலக அளவில் முக்கிய சக்திப் பாதையாகக் கருதப்படும் பகுதியில் நடந்த இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட கப்பலின் விவரங்களோ அல்லது அதில் இருந்தவர்களின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ செய்திகளோ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், சர்வதேச அளவில் தினசரி கோடிக்கணக்கான பீப்பாய் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகிக்கப்படும் இந்த முக்கிய வழித்தடத்தில் நடந்துள்ள இந்த வெடிப்புச் சம்பவம், வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் இச்சமயத்தில், இச்சம்பவம் எரியும் தீயில் நெய்யை வார்ப்பது போல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், தங்களது முக்கிய எரிசக்தி விநியோகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்துப் பெரும் அச்சமடைந்துள்ளன. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான் அரசு, ஹார்முஸ் நீரிணை வழியே செல்லும் அனைத்துக் கப்பல்களும் தங்களால் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பான பாதையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறிச் செயல்படும் கப்பல்களுக்கு விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளது.
