LATEST NEWS
“விஜய் சூப்பர் ஆக்ஷன்..!” 7 நாட்களில் 346 புகார்களுக்கு அதிரடித் தீர்வு… தமிழக ‘சிங்கப்பெண்’ படையின் மாஸ் கெத்து.. அலறும் கிரிமினல்கள்..!!
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களை அடியோடு ஒழிக்கும் நோக்கில், நவீனப் பயிற்சிகளுடன் களமிறக்கப்பட்டுள்ள ஒரு பிரத்யேகப் பாதுகாப்பு அதிரடிப் பிரிவே சிங்கப்பெண் படை மாநிலம் முழுவதும் நடத்திய தீவிர நடவடிக்கைகளின் மூலம் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடிப் பாதுகாப்பு அளிப்பது, அவசரக் காலப் புகார்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வது என கடந்த ஒரு வாரத்திலேயே ஆயிரக்கணக்கான மக்களிடம் இப்படை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் வந்த 346 புகார்களுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட்டுள்ளதோடு, கடுமையான சட்டமீறல்கள் நிலவிய 28 வழக்குகளில் முறையான குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கடுமையான சட்டமீறல்கள் நிலவிய 28 வழக்குகளில் முறையான குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ப்பதிலும் சிங்கப்பெண் படை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் காவல் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்ட இப்படையினர், காணாமல் போன 14 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களை விரைவாகக் கண்டுபிடித்து மீட்டுத் தங்களது குடும்பங்களுடன் இணைத்துள்ளனர். மேலும், சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட்டு பள்ளி இடைநின்ற 51 சிறுவர், சிறுமிகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்துப் புதிய வாழ்க்கைக்கு வழிவகுத்துள்ளது சிங்கப்பெண் படை.
வழக்கமான குற்றத் தடுப்புப் பணிகளுடன் நிறுத்திவிடாமல், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அடித்தட்டு வரை கொண்டு செல்லும் வகையில் ஒரே வாரத்தில் 3,580 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் தொழிற்பேட்டைகளில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு உரிமைகள், டிஜிட்டல் இணையப் பாதுகாப்பு மற்றும் அவசரகால உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்புகள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் தொடர்ந்து உறுதி செய்யப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
