“உச்சகட்ட பதற்றம்..! டிரம்பின் மகனுக்கு ஈரான் வைத்த மெகா செக்..!” உலக நாடுகளை நடுங்க வைத்த ‘அந்த’ 3 நிமிட அனிமேஷன் கிராபிக்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உச்சகட்ட பதற்றம்..! டிரம்பின் மகனுக்கு ஈரான் வைத்த மெகா செக்..!” உலக நாடுகளை நடுங்க வைத்த ‘அந்த’ 3 நிமிட அனிமேஷன் கிராபிக்ஸ்..!!

Published

on

ஈரான் அரசு தொலைக்காட்சி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் பரோன் டிரம்பைக் கடத்த அல்லது கொலை செய்ய இலக்கு வைத்து 3 நிமிட அனிமேஷன் வீடியோவை வெளியிட்டு, அவருக்கு ரூ.83 கோடி பரிசு அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. பரோன் டிரம்பைக் கண்காணிப்பது, அவரது பயணத் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு வளையங்களை உடைப்பது போன்ற காட்சிகளைக் கொண்ட இந்த வீடியோ, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

கடந்த 2020-இல் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் காசெம் சுலைமானி மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், அரசு ஊடகத்தின் மூலம் அமெரிக்க அதிபர் குடும்பத்தினருக்கு நேரடியாக விடுக்கப்பட்ட முதல் மரண அச்சுறுத்தல் இதுவெனக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் அனிமேஷன் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன, இது உலகளாவிய ராஜதந்திரப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in