LATEST NEWS
உங்க உடம்புல ரத்த சோகை, மூட்டு வலி, ஆஸ்துமா தொந்தரவு இருக்கா..? அப்போ உடனே இந்த செல்வ முரல் மீனை சாப்பிடுங்க… மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி ரகசியம்..!!
பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட செல்வ முரல் மீன் பெரிதும் உதவியாக இருக்கிறது. உருளை வடிவ உடலையும் கூர்மையான ஊசி போன்ற நீண்ட தாடைகளையும் கொண்ட இந்த தனித்துவமான கடல் மீனின் மேல் பகுதி பளபளப்பான சாம்பல் அல்லது நீல நிறத்திலும், அடிவயிற்று பகுதி வெள்ளி நிறத்திலும் காணப்படுகிறது. இந்த மீனில் உயர்தர புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால், உடல் திசுக்களை புதுப்பிக்கவும் தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கெட்ட கொழுப்பு இல்லாததால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.
மேலும், இந்த மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து மாரடைப்பு அபாயத்தைத் தடுப்பதுடன், நினைவாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் பற்களை வலுவாக்கி, எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. அத்துடன், இதில் இருக்கக்கூடிய செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தித் தொற்று நோய்கள் வராமல் தடுக்கின்றன.
செல்வ முரல் மீனின் சதை பகுதி மிகவும் மென்மையாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடும். எனவே செரிமானக் கோளாறு, மூலநோய் மற்றும் சுவாச நோய் உள்ளவர்கள் இந்த மீனை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சுவையிலும் சிறந்த இந்த மீனில் மிகக் குறைந்த அளவே முட்கள் இருப்பதால் குழந்தைகளும் பயமின்றி சாப்பிடலாம். இருப்பினும், மீன் ஒவ்வாமை உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.
