“தாக்குதலை நிறுத்தலனா அவ்ளோதான்”.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ஓப்பன் வார்னிங்.. நடுங்க வைக்கும் மேற்கு ஆசிய பதற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தாக்குதலை நிறுத்தலனா அவ்ளோதான்”.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ஓப்பன் வார்னிங்.. நடுங்க வைக்கும் மேற்கு ஆசிய பதற்றம்..!!

Published

on

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடிகளில் சிக்கி, இரண்டு எண்ணெய் கப்பல்கள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அந்த வழியாகச் சென்ற மற்ற நான்கு வணிகக் கப்பல்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தடுத்து நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஈரான் படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உடனடியாகத் தங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள ஈரான், இல்லையெனில் முழுவீச்சில் மிகக் கடுமையான எதிழ்த்தாக்குதல்களைத் தொடங்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in