பகீர் சிசிடிவி காட்சி..! டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் எஸ்கேப்.. பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ தூரம் காரோடு இழுத்துச் சென்ற கொடூரன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர் சிசிடிவி காட்சி..! டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் எஸ்கேப்.. பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ தூரம் காரோடு இழுத்துச் சென்ற கொடூரன்..!!

Published

on

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தின் ஷாபாத் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த ஒரு வெள்ளை நிற ஹூண்டாய் வெர்னா கார் ஓட்டுநர், தனது காரில் டீசலை நிரப்பியுள்ளார். ஆனால், அதற்கான தொகையைச் செலுத்தாமல் அவர் திடீரென காரை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றார்.

https://www.instagram.com/reel/DavCCkZkVyz/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

கார் ஓட்டுநர் ஏமாற்றிவிட்டு ஓடுவதைக் கண்ட லப்பு சிங் என்ற பெட்ரோல் நிலைய ஊழியர், காரின் கதவைத் திறந்து உள்ளே ஏறி அவரைத் தடுக்க முயன்றுள்ளார். எனினும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். காரினுள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கார் கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலும், தனது உயிரைக் காத்துக் கொள்ளவும் அந்த ஊழியர் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in