“மருத்துவமனையா… அடகுக் கடையா..?!” ஸ்ட்ரெச்சர் வேணும்னா போனை அடகு வைங்க.. நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருத்துவமனை.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மருத்துவமனையா… அடகுக் கடையா..?!” ஸ்ட்ரெச்சர் வேணும்னா போனை அடகு வைங்க.. நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருத்துவமனை.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளின் குடும்பத்தினரிடம் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலி வழங்குவதற்கு முன்பாக அவர்களின் மொபைல் போன், வாகனச் சாவி அல்லது அசல் அடையாள அட்டையைப் பிணையாகப் பெறுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “அவசர காலத்தில் நோயாளியின் உயிர் முக்கியமா அல்லது மொபைல், சாவி போன்ற பொருட்களா?” என்ற கேள்வியை எழுப்பி, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

इमरजेंसी में मरीज की जान ज़्यादा ज़रूरी है या मोबाइल, गाड़ी की चाबी और ओरिजिनल ID?

जयपुर के RUHS Hospital का यह वीडियो गंभीर सवाल खड़े करता है।

आरोप है कि स्ट्रेचर और व्हीलचेयर देने से पहले परिजनों से मोबाइल, गाड़ी की चाबी या ओरिजिनल ID जमा कराने के लिए कहा जाता है।

यह… pic.twitter.com/991ATcPn68— Ravindra Upadhyay (@Ravindrau07) August 5, 2026

உயிருக்குப் போராடும் நோயாளிகளை விரைவாகச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய இக்கட்டான நேரத்தில், மருத்துவமனை நிர்வாகத்தின் இத்தகைய பிடிவாதமான நடைமுறை, நோயாளிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மன உளைச்சலையும் அலைச்சலையும் ஏற்படுத்துகிறது. அவசர சிகிச்சைப் பிரிவின் இந்த வினோதமான நடைமுறை குறித்துச் சம்பந்தப்பட்ட உயராதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in