LATEST NEWS
அட என்னமா பொசுக்குனு சொல்லிட்ட..? “எந்த நாட்டு மக்கள் ரொம்ப இரிடேட்டிங்..?” மலேசியப் பெண்ணின் திகைத்துப் போன பாகிஸ்தான் யூடியூபர்.. இணையத்தில் தீயாய் பரவும்..!!
சமூக வலைதளங்களில் ‘கன்டென்ட் கிரியேஷன்’ மற்றும் வியூஸ்களுக்காகப் பொது இடங்களில் பிறரை இடைஞ்சல் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த டேனியல் வாஜித் என்ற யூடியூபர், மலேசிய தெருவில் அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, “உங்களுக்கு எந்த நாட்டு மக்கள் மிகவும் எரிச்சலூட்டுகிறார்கள்?” என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அப்பெண் அவசரத்தில் இருந்தபோதிலும், யூடியூபர் விடாமல் துரத்திக் கேட்டதால், “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என்று அப்பெண் திரும்பக் கேட்டுள்ளார். அவர் “பாகிஸ்தான்” என்று கூறியதும், உடனே அப்பெண் “பாகிஸ்தானியர்கள் தான்!” என்று விரலைச் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
https://www.instagram.com/reel/DbkTCshNQTg/?utm_source=ig_embed&ig_rid=AfQ8H2E90RQetC5RPTShC4d
அந்தப் பெண் அளித்த இந்த சடாரென அதிர்ச்சிப் பதில் வீடியோவில் பதிவாகி, இன்ஸ்டாகிராமில் 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது. இருப்பினும், இந்த வீடியோவைக் கண்ட பாகிஸ்தானியர்கள் பலரும் கடுமையான கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் வெளியிட்டு வருகின்றனர். “மலிவான விளம்பரத்திற்காகவும் வியூஸ்களுக்காகவும் பொது இடங்களில் அந்நிய நாட்டு மக்களிடம் வம்படியாகச் சென்று பேட்டி எடுத்து, சொந்த நாட்டையே உலகளவில் அவமானப்படுத்தி விட்டாய்” என நெட்டிசன்கள் பலரும் கருத்துப் பகுதியில் அந்த பாகிஸ்தான் யூடியூபரை மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
