LATEST NEWS
FLASH: நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும் – மத்திய அரசுக்கு CJP கெடு..!!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஜேபி அமைப்பின் தலைவர் அபிஜீத் திப்கே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தங்களின் இந்த முக்கியக் கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர்களின் போராட்டம் ஓயாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த நிதி உதவியும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர். மேலும், நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது அராஜகமாக வன்முறையை ஏவி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
