LATEST NEWS
எங்களுக்கு சம்மந்தமே இல்ல..! நீட் தேர்வை கொண்டு வந்தது யார் தெரியுமா..? சட்டசபையில் குண்டைத் தூக்கிப்போட்ட எ.வ வேலு… திமுக – காங்கிரஸ் உறவில் மீண்டும் விரிசல்..!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் வழக்கம் போல மிகவும் சூடுபிடித்துள்ளன. நீட் தேர்வு முதன்முதலில் எப்போது, யாரால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒன்றுக்கொன்று பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், சட்டப்பேரவையில் பேசிய திமுக மூத்த அமைச்சர் ஏ.வ.வேலு, நீட் தேர்வின் உண்மையான வரலாற்றுப் பின்னணியை விளக்கி முக்கியத் தெளிவுரையை வழங்கி உள்ளார். மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக இடம்பெற்றிருந்த நிலையை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட அவர், நாடு முழுவதும் நீட் தேர்வை அமல்படுத்தியதில் திமுகவிற்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மூத்த அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத் தான் நீட் தேர்வை முதன்முதலில் கொண்டுவந்தார் என்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். அப்போது திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோதிலும், இந்தத் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தவில்லை என்றும், மத்திய அமைச்சரவையில் இருந்தபோதே நீட் கொண்டுவரப்படுவதை திமுக கடுமையாக எதிர்த்தது என்றும் அவர் சட்டசபையில் விளக்கினார்.
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் மாநில உரிமைகளைப் பாதிக்கும் நீட் தேர்வை திமுக தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருவதாகவும், எக்காலத்திலும் அதை ஏற்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்தார். நீட் தேர்வின் பின்னணி குறித்த அமைச்சர் ஏ.வ.வேலுவின் இந்த விரிவான உரை, தற்போது அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.
