LATEST NEWS
நான் ராஜினாமா செய்தது ஏன்..? மாணவர்களே உங்க நேரத்தை வீணாக்காதீங்க.. உண்மையை உடைத்த தர்மேந்திர பிரதான்..!!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார். மாணவர்களின் போராட்டத்தைத் தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கவும், நாட்டின் ஒற்றுமையைப் பேணவுமே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தேசப் பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டே தனது பதவியைத் துறந்துள்ளதாக அவர் விளக்கியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயலும் சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.
இறுதியாக, மாணவர்கள் தேவையில்லாத சட்டச் சிக்கல்களில் சிக்கித் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் தங்களது படிப்பு மற்றும் எதிர்காலக் கனவுகளில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டுள்ளார்.
