“உன் போட்டோவை நெட்ல போட்டுருவேன்!” மிரட்டி நகை, பணம் பறிப்பு… 2 வருடங்கள் சித்திரவதை செய்த வாலிபர்..! இன்ஸ்டாகிராம் நட்பால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் போட்டோவை நெட்ல போட்டுருவேன்!” மிரட்டி நகை, பணம் பறிப்பு… 2 வருடங்கள் சித்திரவதை செய்த வாலிபர்..! இன்ஸ்டாகிராம் நட்பால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!!

Published

on

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர், பெண்ணின் அனுமதியின்றி ஆபாசப் புகைப்படங்கள் எடுத்து, அதைக் கொண்டு மிரட்டிப் பணம் பறித்ததோடு மனரீதியாகவும் துன்புறுத்தியதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி, 2024-ம் ஆண்டு மணிப்பால் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, அப்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ‘அன்ஃபால்’ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்ட அன்ஃபால், அப்பெண்ணைப் பலமுறை சந்தித்துள்ளார். பின்னர், மணிப்பால் அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, பெண்ணின் அனுமதியின்றி ஆபாசமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அதன்பின், அந்த ஆபாசப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி, ஃபோன்பே மூலம் அப்பெண்ணிடமிருந்து அன்ஃபால் பணம் பறித்துள்ளார். 2026 ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மிரட்டியபோது, பெண்ணிடம் பணம் இல்லாததால் அவரது கழுத்தில் இருந்த 10 முதல் 12 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு யாரிடமும் கூறக் கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் அப்பெண் அவரது எண்ணை பிளாக் செய்த நிலையிலும், வேறு எண்களிலிருந்து அழைத்து மிரட்டியுள்ளார். மேலும், வாட்ஸ்அப் வீடியோ காலில் மணிக்கணக்கில் இருக்குமாறும், தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்திக்கொள்ளுமாறும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு இணங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால், பயத்தின் காரணமாக அப்பெண் தன் மார்பில் பிளேடால் ‘அன்ஃபால்’ என்ற பெயரை கீறிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

கடந்த செப்டம்பர் 4 அன்று பெற்றோர் பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரித்தபோதே இந்தச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதையடுத்த செப்டம்பர் 8 அன்று, பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் காவல்துறைக்குச் சென்று சட்ட நடவடிக்கை கோரினார். அதன்பேரில், பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66(E) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உயர்மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in