LATEST NEWS
“ஐயோ பாவம் தாத்தா..!” மளிகைக் கடைக்குள் பறந்து வந்த கார்.. 81 வயது முதியவர் செய்த விபரீதம்… நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
துருக்கியின் பார்டின் மாகாணத்தில், 81 வயது முதியவர் ஒருவர் சாலையோரமாகத் தனது காரை நிறுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வேகமாகக் குதித்து அருகில் இருந்த ஒரு மளிகைக் கடைக்குள் புகுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்தின் முழுமையான காட்சிகள் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், கடையின் முன்பகுதி மற்றும் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தன. விபத்து நடந்த உடனே அங்கிருந்த மக்கள் மற்றும் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிவந்து முதியவருக்கு உதவினர். முதியவர்கள் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்த்தும் இந்த விபத்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
