LATEST NEWS
“மதுராந்தகத்தில் ஜெயித்ததும் மந்திரி பதவியா..?” மரகதம் குமரவேல் போட்டு உடைத்த உண்மை.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக வெற்றிக் கழகஅமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு புதிய தகவல்கள் பரவி வருகின்றன. தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் களம் கண்ட மரகதம் குமரவேலுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த வதந்திகள் மேலும் தீவிரமடைந்தன.
இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மரகதம் குமரவேல், தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக வெளியாகும் தகவல்களுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்கள் அவரிடம் அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர் பதவி குறித்துக் கேள்வி எழுப்பியபோது, “அதெல்லாம் எதுவுமே கிடையாது” என மிகவும் சுருக்கமாகவும் நேரடியாகவும் பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தத் தெளிவான விளக்கத்தின் மூலம், தவெக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவரைச் சுற்றி பரவி வந்த யூகங்கள் அனைத்தும் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளன
