LATEST NEWS
BREAKING: தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி கைது…! முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் இதர சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், கட்சி நிதி என்ற பெயரில் பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகை யாரை சென்றடைந்தது என்பதை கண்டறிய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டு அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் சாதாரண நபர் அல்லாமல் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் இருந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேஷை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
