LATEST NEWS
அந்த ₹100 கோடி யாருக்குப் போனது..? முன்ஜாமீன் நிராகரிப்பு ஏன்..? அன்பில் மகேஷ் வழக்கில் உயர்நீதிமன்றம் சொன்னது என்ன..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன் ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கட்சி நிதி என்ற பெயரில் பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தப் பெருந்தொகை யாரைச் சென்றடைந்தது என்பதை அன்பில் மகேஷிடம் நேரடி விசாரணை நடத்தாமல் கண்டறிய முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
நிதித் தொடர்புகளுடைய குற்றங்கள் குறித்த இந்த விசாரணையானது தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய சூழலில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், அது காவல்துறையின் விரிவான புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் பல புதிய தகவல்கள் மற்றும் தடயங்கள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருவதால், தற்போதைய நிலையில் முன் ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தத் தள்ளுபடி உத்தரவைத் தொடர்ந்தே, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை அமைந்தகரையில் வைத்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
