“இதுக்காகவா மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தாங்க.?” தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுக்காகவா மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தாங்க.?” தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..!!

Published

on

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. திருவண்ணாமலை கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்துக்கு அருகே வணிக வளாகம் கட்டும் திட்டத்தை எதிர்த்து ரமேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீர்நிலைகள் மற்றும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுப்பது தொடர்பான வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“நீர்நிலைகள், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. இதற்காகத்தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா?” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement

அரசு நிலங்களையும், பொதுச் சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் தவறக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கடுமையான கண்டனம் சன் நியூஸ் செய்தி கார்டில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in