LATEST NEWS
BREAKING: அமைச்சர்களுக்கு சிக்கல்.. திமுகவிற்கு கிடைத்த வெற்றி… உயர்நீதிமன்றம் அதிரடி..!!
தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரக் கோரிய திமுகவின் மனுவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. ‘ஜெம் கிரானைட்ஸ்’ ஆர். வீரமணி சம்பந்தப்பட்ட போக்சோ விவகாரத்தில், முந்தைய திமுக அரசு குற்றவாளியைப் பாதுகாத்து உண்மைகளை மூடி மறைத்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இந்த இரு அமைச்சர்களும் மற்றும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் பொதுவெளியில் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆதாரமற்ற இத்தகைய அவதூறான கருத்துக்களால் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மானநஷ்ட ஈடாக ₹1.01 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், சமூக ஊடகங்களில் உள்ள அவதூறுப் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் திமுக கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, அமைச்சர்கள் மற்றும் தவெக ஐடி விங்கிற்கு எதிராக வழக்குத் தொடர திமுகவுக்குப் பச்சைக் கொடி காட்டி அனுமதி அளித்துள்ளார்.
