LATEST NEWS
“எப்படியாச்சும் சட்டப்பேரவைக்குள் போயிடணும்னு வெறியோட இருக்கேன்” உங்களுக்கு பார்சல் போடுறேன் பாருங்க… சீமான் ஆவேசம்..!!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி காலியாகியுள்ளது. இதனால் இத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் வென்று அவைக்குள் (சட்டமன்றத்திற்குள்) சென்றுவிட வேண்டும் என வெறியோடு இருக்கிறேன்” என்று முழங்கியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் ‘பொது வேட்பாளர்’ என்ற கருத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள சீமான், தான் எப்போதுமே ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பொது வேட்பாளர்தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார். தவெக உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சிகள் மற்றும் திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், “எதிரிக்கு ஆகிறது மெர்சல், என்பவர்களுக்கு இருக்கிறது பார்சல்” எனத் தனது பாணியில் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
