LATEST NEWS
மகளின் உயிரைக் குடித்த போதை ஊசி… காதலனுடன் லாட்ஜில் தங்கிய இளம் பெண்…நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க போட்ட பிளான்.. காதலியின் உயிரைப் பறித்த ‘அந்த’ ஒரு ஊசி…பெற்ற தாயே செய்த விபரீத தொழில்.. பலியான சொந்த மகள்…!
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் யாஸ்மின், கடந்த 1-ஆம் தேதி கேட்டரிங் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது காதலன் சதாம் உசேனுடன் (19) வெளியே சென்றுள்ளார். பெற்றோரை நம்ப வைத்துவிட்டுப் பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிந்த இந்த காதல் ஜோடி, இறுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு தங்கியிருந்த போது நேற்று மாலை யாஸ்மினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த சதாம் உசேன், தனது நண்பர் ஷேக் அப்துல்லாவை உதவிக்கு அழைத்து, யாஸ்மினை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், நிலைமை மோசமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட யாஸ்மினைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக மரணம் குறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காதலன் சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நீண்ட நேரம் உல்லாசமாக இருப்பதற்காக யாஸ்மினுக்கு போதை மாத்திரைகளைக் கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்தியது அம்பலமானது. அளவுக்கு அதிகமான போதை மருந்து (Overdose) உடலில் ஏறியதன் காரணமாகவே யாஸ்மின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து காலி போதை மாத்திரை அட்டைகளையும், ஊசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடத்தல் மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சதாம் உசேனுக்கு இந்த போதை மாத்திரைகளும் ஊசியும் எங்கிருந்து கிடைத்தன என்று காவல்துறையினர் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உலுக்கும் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. உயிரிழந்த யாஸ்மினின் தாயாரான ஷகிலா பேகமே, சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது. தாயார் விற்று வந்த போதைப்பொருள்தான், அவரது சொந்த மகளின் உயிரையே பறிக்கக் காரணமாக இருந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்த விவகாரத்தில் போதைப்பொருள் சப்ளை செய்த தாயார் ஷகிலா பேகத்தையும் காவல்துறையினர் வளைத்துப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
