LATEST NEWS
“பெற்ற வயிறு எரியலையா உனக்கு..?!” 6 வயதுச் சிறுவனை கொடூரச் சித்திரவதை செய்த தாய்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!
ரூ.5 மதிப்பிலான மிட்டாயை எடுத்துச் சாப்பிட்டதற்காக, பெற்ற தாய் ஒருவரே கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கித் தனது 6 வயதுக் குழந்தையின் உள்ளங்கால்களில் சுட்டு இரத்தக்காயங்களை ஏற்படுத்திய கொடூரச் சம்பவம் ஃபதேபூரில் நடந்துள்ளது. இந்த கொடூரத்தைக் கண்டு பதறிப்போய் தடுக்க வந்த பாட்டியையும் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, காயம் அடைந்த குழந்தையை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு அந்தத் தாய் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றுள்ளார்.
6 साल के बच्चे को एक कलयुगी मां ने चाकू को गैस पर गर्म करके उसके पैर के तलवों को लहूलुहान कर दिया।
आपको सुनकर हैरानी होगी कि ,एक मां ऐसा कैसे कर सकती है ? लेकिन फतेहपुर में ऐसा हुआ है।
केवल ₹5 की टॉफ़ी खाने के बाद कलयुगी मां को इतना गुस्सा आया उसने अपने ही बेटे को असहनीय… pic.twitter.com/kf0u0h8yf2— Uzma Parveen (@UzmaParveen94) August 10, 2026
தன் சொந்தச் மகனுக்கே தாய் இழைத்த இந்தக் கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை, மனைவியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். தாயே தனது குழந்தையின் உள்ளங்காலில் சூடு வைத்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
