CRIME
“அங்க போனா என்னைக் கொன்னுடுவார்..” பஞ்சாயத்து பேசி அனுப்பி 15 நாளில் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்.. 3 குழந்தைகளின் கண் முன்னே கணவனின் வெறியாட்டம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரில், கர்வா சௌத் பண்டிகைக்கு முந்தைய நாள் அவ்னிஷ் என்ற நபர் தனது மனைவி சுசீலாவை மூன்று குழந்தைகளின் கண் முன்னாலேயே கோடரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அலஹ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட சௌராசியா கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. வேலைக்காக அவ்னிஷ் லூதியானா செல்ல விரும்பிய நிலையில், சுசீலா டெல்லி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த இடமாற்றத் தகராறில் ஆத்திரமடைந்த அவ்னிஷ், மனைவியின் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் கோடரியால் சரமாரியாக வெட்டிவிட்டு, தனது 6 வயது மகனுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சுசீலாவை அவரது கணவர் அவ்னிஷ் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் பயந்துபோய் சுசீலா கடந்த இரண்டு மாதங்களாகத் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருதரப்பு சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அவர் கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். “என்னை மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பினால் அவர் என்னைக் கொன்றுவிடுவார்” என்று சுசீலா ஏற்கனவே தனது குடும்பத்தினரிடம் அச்சம் தெரிவித்தது இப்போது நிஜமாகியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
