“குற்றவாளியைப் போல நடத்தினாங்க” – அதிகாலையில் இரவு உடையோடு தூக்கிய போலீஸ்.. தமிழ்நாடு டிஜிபியிடம் பொருளாதார நிபுணர் கலையரசன் அதிரடிப் புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குற்றவாளியைப் போல நடத்தினாங்க” – அதிகாலையில் இரவு உடையோடு தூக்கிய போலீஸ்.. தமிழ்நாடு டிஜிபியிடம் பொருளாதார நிபுணர் கலையரசன் அதிரடிப் புகார்..!!

Published

on

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தன்னைத் துன்புறுத்தியதாகத் தமிழ்நாடு டிஜிபியிடம் பொருளாதார நிபுணர் கலையரசன் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். எந்தவொரு முறையான சட்டபூர்வ ஆவணங்களோ அல்லது முதல் தகவல் அறிக்கை (FIR) நகலோ காட்டப்படாமல், அதிகாலை நேரத்தில் இரவு உடையில் இருந்த தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் தன்னை ஒரு குற்றவாளியைப் போல நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள கலையரசன், அவர்கள் காவல்துறை வாகனத்திற்குப் பதிலாக வாடகை காரில் வந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் தன்னுடைய மொபைல் போனைப் பறிமுதல் செய்ததாகவும், தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் போனில் பேசிக்கொண்டே இந்தச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் தனது புகாரில் விவரித்துள்ளார்.

Advertisement

சட்ட விரோதமான இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்டபூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கலையரசன் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in