LATEST NEWS
என்னடா இது..? பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புளூ டிரம்கள்.. தோண்ட தோண்ட கொட்டிய ₹60 கோடி பணம்… போலீசாருக்கே அதிர்ச்சி கொடுத்த பக்கத்து வீட்டுச் சண்டை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பரைபூர் (ராம்நகர்) பகுதியில், ஒரு வீட்டின் தரைக்கு அடியில் பிளாஸ்டிக் டிரம்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளைப் போலீசார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த ரகசியம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியபோது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பல நீல நிற டிரம்கள் கண்டெடுக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, பணமதிப்பிழப்பு காலத்தில் அங்கிருந்து கோடிக்கணக்கான ரூபாயை மூட்டை மூட்டையாகக் கடத்தி வந்துள்ளார். ஊருக்குத் திரும்பிய அவர், அந்தப் பணத்தைக் கொண்டு பல ஏக்கர் நிலங்களை வாங்கியதுடன், மீதமுள்ள பணத்தை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுத் தரையைத் தோண்டி பெரிய பிளாஸ்டிக் டிரம்களில் நிரப்பிப் புதைத்து வைத்துள்ளார்.
தற்போது புதைக்கப்பட்ட பணத்தில் சுமார் 4 கோடி ரூபாய் வரை இயந்திரங்கள் மூலம் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு கைப்பற்றப்பட்ட மொத்தப் பணம் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் எனப் போலீஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
