LATEST NEWS
“பூமி அப்படியே வாயப் பொளந்துச்சு…” அதிகாலையில் இந்தோனேசியாவை உலுக்கிய பேரிடர்… சுவர்கள் அப்படியே சரிந்து விழும் திக் திக் காட்சிகள்..!!
இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள புளோரஸ் தீவின் கடலோரப் பகுதியில், ஆகஸ்ட் 15, 2026 சனிக்கிழமை அதிகாலை வேளையில் 7.7 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தின் ‘எண்டே’ நகரிலிருந்து வடமேற்கே சுமார் 68 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மிகக் குறுகிய ஆழப் பகுதியில் (Shallow earthquake) பதிவாகியிருந்தது. அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த அதிர்வால் ஒட்டுமொத்த பிராந்தியமும் கடுமையாகக் குலுங்கியது.
இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தால் மவுமேரே போன்ற முக்கிய நகரங்களில் இருந்த துறைமுக முனையக் கட்டிடங்கள், வீடுகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மருத்துவமனைகளின் சுவர்களில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டதால் நோயாளிகள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான வெளிப்புறப் பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். நிலநடுக்கம் ஏற்பட்ட தருணத்தில் கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியதும், சுவர்கள் விரிசலடைந்து சிமெண்ட் பாளங்கள் கீழே விழுந்ததும் அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களில் பதிவாகி பார்ப்போரைக் நெஞ்சை பதறவைத்தது.
https://twitter.com/i/status/2088408804266307967
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கடல் நீர் பின்வாங்கியதால், இந்தோனேசியாவின் புவி இயற்பியல் முகமை உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்து மக்களை உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான கடலோர வாசிகள் மரண பயத்தில் வாகனங்களிலும், கால்நடையாகவும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு 6.2 ரிக்டர் அளவு வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட வலுவான அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகின. இந்த இயற்கைப் பேரிடரால் இதுவரை டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
