LATEST NEWS
தெய்வமே காப்பாத்திடீங்க..! காட்டுத்தீயை அணைக்கப் போராடிய வீரர்கள்.. திடீரென காத்திருந்த பயங்கர சர்பிரைஸ்.. மண்டியிட்டு நன்றி சொன்ன தீயணைப்பு வீரர்கள்..!!
இந்தோனேசியாவில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த கடுமையான வறட்சியால், கட்டுக்கடங்காத காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திணறி வந்த தீயணைப்பு வீரர்களுக்கு, திடீரென பெய்த கனமழை பெரும் நிம்மதியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. தெற்கு கலிமந்தன் பகுதியில் உள்ள பான்ஜார் மாவட்டத்தில் சுமார் நான்கு மாதங்களாகத் தொடர்ந்து பரவி வந்த தீயை அணைக்கும் பணியில், தங்களை முழுமையாக அர்ப்பணித்து போர்க்கால அடிப்படையில் தீயணைப்புத் துறை தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர். வறண்ட வானிலை காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதால், அதைக் கட்டுப்படுத்துவது அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அப்பகுதியில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்தத் “தெய்வீக” மழையைக் கண்டதும், எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் தங்களின் கைகளில் இருந்த தண்ணீர்க் குழாய்களைக் கீழே போட்டுவிட்டு, கொட்டும் மழையில் நனைந்தபடி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். மேலும், பலர் தங்களின் பாதுகாப்பு உடைகளுடனேயே சாலையில் மண்டியிட்டு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக “சுஜூத் சுக்ர்” (நன்றியறிதல் பிரார்த்தனை) செய்த நெகிழ்ச்சியான காட்சிகள் அங்கிருந்தவர்களையே உருக வைத்தன.
தீயணைப்பு வீரர்களின் இந்த உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, உலகளவில் வைரலாகி வருகிறது. இந்தத் திடீர் கனமழை காட்டுத்தீயை அணைக்க உதவியது மட்டுமின்றி, அப்பகுதி முழுவதும் சூழ்ந்திருந்த நச்சுப் புகையையும்கட்டுப்படுத்தி, காற்றின் தரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இயற்கையின் இந்த ஆதரவால் உற்சாகமடைந்துள்ள தீயணைப்பு வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டியும், அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும் நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
