LATEST NEWS
“அடேங்கப்பா.. ஆடம்பர கார், விலை உயர்ந்த உடை..” சு.வெங்கடேசனைப் படுத்தியெடுத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!!
தன்னை விமர்சித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாகச் சாடியுள்ளார். கம்யூனிஸ்ட் எம்.பி.யான சு.வெங்கடேசன், ஆடம்பரக் கார் மற்றும் விலை உயர்ந்த உடை எனச் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ நூல்கள் இருந்த அலமாரிகளில், பாவங்கள் கழிய மகா பெரியவருடைய நூல்களை அடுக்கி வைக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்திருந்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்குச் சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலேயே, நீதிபதி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
