LATEST NEWS
“வாழ்க்கை ஒரு வட்டம்டா” உங்க பயம் எனக்குப் புடிச்சிருக்கு CM சார்.. முதல்வரை ரவுண்டு கட்டி அடித்த ஸ்டாலின்..!!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போதைய தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தேர்தல் பரப்புரையின் போது விஜய் மேற்கொண்டு வரும் தீவிரப் பயணங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளைக் கிண்டல் செய்யும் வகையில் ஸ்டாலினின் இந்த உரை அமைந்திருந்தது.
விஜய்யின் தேர்தல் பிரச்சார நடைமுறைகளைச் சாடிய ஸ்டாலின், “மனித நடமாட்டமே இல்லாத சந்துபொந்துகளில்கூட விடாமல் அவர் ஊர்வலம் போகிறார். உங்க பயம் எனக்குப் புடிச்சிருக்கு CM சார்!” என்று மேடையில் ஆவேசமாகக் குறிப்பிட்டார். மேலும், “அவர் 5 நிமிடம் பேசினாலே அகிலமே ஆடும் என்றார்கள்; ஆனால் இன்று ஓட்டு வாங்குவதற்காக அவரே குட்டிக்கரணம் அடிக்கிறார்” என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து விஜய்யின் சினிமாப் பேச்சுக்களை அரசியலோடு ஒப்பிட்ட ஸ்டாலின், விஜய் எப்போதுமே சினிமாவில் ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என வசனம் பேசுவார் என்று சுட்டிக்காட்டினார். “அந்தப் புகழ்பெற்ற வசனம் வேறு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தோல்வி பயத்தில் இப்போது குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கும் அவருக்குத்தான் மிகச் சூப்பராகப் பொருந்துகிறது” என்று காரசாரமாக விளாசித் தள்ளியுள்ளார்.
