அறிவாலயத்தை உலுக்கும் DVAC கைது நடவடிக்கை… கே.என்.நேரு, துரைமுருகனுக்கும் ஆப்பு..? சட்ட ரீதியாகச் சமாளிக்க ஸ்டாலின் தீவிர ஆலோசனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அறிவாலயத்தை உலுக்கும் DVAC கைது நடவடிக்கை… கே.என்.நேரு, துரைமுருகனுக்கும் ஆப்பு..? சட்ட ரீதியாகச் சமாளிக்க ஸ்டாலின் தீவிர ஆலோசனை..!!

Published

on

திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகத் தீவிரமடைந்து வரும் சட்ட நடவடிக்கைகளும் கைதும் அண்ணா அறிவாலயத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது கட்சி வட்டாரத்தில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அன்பில் மகேஸின் கைதைத் தொடர்ந்து, திமுகவின் மூத்த தலைவர்களான கே.என்.நேரு மற்றும் துரைமுருகன் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தகட்டமாகச் சீனியர் தலைவர்களும் விரைவில் கைதாகலாம் என்ற வலுவான வதந்திகள் பரவி வருவதால் திமுக தலைமை கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

Advertisement

இந்த அடுத்தடுத்த சட்ட நெருக்கடிகளை எப்படி முறியடிப்பது என்பது குறித்தும், கைது நடவடிக்கைகளைச் சட்ட ரீதியாகச் சந்திப்பது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in