LATEST NEWS
“வீட்டுக்குள்ள புதையல் இருக்கு..” ரகசிய தகவலால் வீட்டை தோண்டிய போலிஸ்… உள்ளே காத்திருந்த பேரதிர்ச்சி..! அப்படி என்ன இருந்தது தெரியுமா..!?
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால். இவரது சொத்து மதிப்பு மீது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக கிராமம் முழுவதும் முன்கூட்டியே மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் ராகேஷ் யாதவ் வீட்டிற்கு சென்ற போலீசார், சந்தேகப்படும் படியான அறையில் பள்ளம் தோண்டினர்.
அப்போது பூமிக்கு அடியில் 3 பீப்பாய்களில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக ராகேஷ் யாதவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராகேஷ் யாதவின் பழத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
