LATEST NEWS
“ஐயோ என்னை விட்டுடுங்க” கதறிய இளம்பெண்… ஆடைகளைக் களைந்து கிழித்து… நைட் கிளப்பில் நடந்த பயங்கரம்… பகீர் கிளப்பிய அதிர்ச்சி வீடியோ..!!
அசாம் மாநிலம் கவுகாத்தியின் கானபாரா பகுதியில் உள்ள ‘தி லோக்கல்ஸ்’ என்ற இரவு விடுதியில், இளம்பெண் ஒருவர் ஆடைகள் களையப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அந்த விடுதியில் ஏற்பட்ட திடீர் தகராறைத் தொடர்ந்து, அங்கிருந்த ஆண் மற்றும் பெண் பவுன்சர்கள் அந்தப் பெண்ணை அடித்தே துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவரை தலைமுடியைப் பிடித்து இழுத்து, உடைகளைக் கிழித்து, அரைகுறை ஆடையுடன் அடித்தபடி அடித்தளத்திற்கு இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆக்ரோஷமும் கண்டனங்களும் எழுந்தன. சம்பவ இடத்தின் தரைத்தளத்தில் அந்தப் பெண் ஆடைகளின்றி கிடக்க, இரண்டு பெண்கள் அவரை காலால் உதைப்பதும், சுற்றிலும் ஆண்கள் வேடிக்கை பார்ப்பதும் போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, கவுகாத்தி டிஸ்பூர் தனிப்படை போலீசார் தங்களாகவே முன்வந்து கொலை முயற்சி மற்றும் பெண்ணின் கற்புக்குப் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், விதிகளை மீறி நள்ளிரவு தாண்டி செயல்பட்ட அந்த இரவு விடுதியின் மேலாளர், நிகழ்ச்சி மேலாளர், முன் அலுவலக நிர்வாகி மற்றும் இரண்டு பெண் பவுன்சர்கள் உட்பட 3 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 7 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைக்க முயன்ற விடுதி நிர்வாகத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாய்ந்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
