பட்டப்பகலில் பயங்கரம்..! போன் தகராறில் கல்லூரி மாணவனை வெட்டிக் கொன்ற பிளஸ்-2 சிறுவன்.. திருப்பூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பட்டப்பகலில் பயங்கரம்..! போன் தகராறில் கல்லூரி மாணவனை வெட்டிக் கொன்ற பிளஸ்-2 சிறுவன்.. திருப்பூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

Published

on

திருப்பூர் ஏ.பி.டி. ரோடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி (19) என்ற முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், செல்போன் வாங்கியது தொடர்பான தகராறில் 16 வயது பிளஸ்-2 பள்ளி மாணவனால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த ஸ்ரீஹரியை, நேற்று வீட்டில் இருந்தபோது அந்தச் சிறுவன் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி வற்புறுத்தி வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீஹரியைச் சிறுவன் சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இக்கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார், ஸ்ரீஹரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற 16 வயது சிறுவனைப் போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். ஆன்லைன் மூலம் செல்போன் வாங்கியதில் இவர்களுக்குள் பணப் பரிவர்த்தனைப் பிரச்சினை இருந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in