“அடச்சீ.. மனிதாபிமானமே இல்லையா..?!” உயிருக்குப் போராடும் குழந்தையை வெளியே தூக்கி எறிந்த மருத்துவமனை… நடுரோட்டில் நின்று கதறி அழும் பெற்றோர்.. இணையத்தை அழவைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடச்சீ.. மனிதாபிமானமே இல்லையா..?!” உயிருக்குப் போராடும் குழந்தையை வெளியே தூக்கி எறிந்த மருத்துவமனை… நடுரோட்டில் நின்று கதறி அழும் பெற்றோர்.. இணையத்தை அழவைத்த வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வறுமையின் கொடூரத்தையும், தனியார் மருத்துவமனைகளின் இரக்கமற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தங்களது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பெற்றோர் தங்களால் முடிந்தவரை கடன்பெற்று மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதும், மருத்துவமனை நிர்வாகம் மனிதாபிமானமே இல்லாமல் அவர்களை வெளியே தூக்கி எறிந்துள்ளது. பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, பிஞ்சு உயிர் ஊசலாடும் நேரத்தில் இரக்கமில்லாமல் வீதிக்குத் துரத்திய தனியார் மருத்துவமனையின் இந்த கொடூர ஆக்ஷன் பார்ப்போரை அதிர வைத்துள்ளது.

गरीबी कितनी दुखदाई होती है।
पैसा लिया इलाज किया और बच्चा सीरियस हुआ तो बाहर कर दिया।

हाथ में बच्चे को लिए पिता परेशान है तो माँ बेसुध होकर हाथ घिस रही है।

मामला उत्तर प्रदेश का बताया जा रहा है।बाबा को इस पर जरूर संज्ञान लेना चाहिए! pic.twitter.com/AKEbudlT40— Er. Kripa Shankar (@ErKripaShankary) August 30, 2026

தங்கள் கண்முன்னே குழந்தை மரணத்தின் விளிம்பில் தவிப்பதைக் கண்டு நிலைகுலைந்த தந்தை, பிஞ்சு உடலைத் தனது கைகளில் ஏந்தியபடி நடுரோட்டில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருக்கிறார். மற்றொருபுறம், என்ன செய்வதென்று அறியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோன தாய், தவிப்புடனும் அவநம்பிக்கையுடனும் தனது கைகளைத் தேய்த்தபடி செய்வதறியாது திகைத்து நிற்கிறார். வறுமையின் கோர முகத்தை விவரிக்கும் இந்த நெஞ்சுயிர்க்கும் நேரடித் துயரக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “பாபா” என்று அழைக்கப்படும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விவகாரத்தை உடனடியாகத் தனது கவனத்தில் கொண்டு, அந்த ஏழைக் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in