“சும்மா அதிருதுல்ல..”மகளின் கல்யாணப் பத்திரிகை கொடுக்க இம்புட்டு கார்களா..? 50 கார்களுடன் கெத்தாக வந்த முன்னாள் எம்.எல்.ஏ..! JCB-யில் பூ மழை பொழிந்த ஆதரவாளர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சும்மா அதிருதுல்ல..”மகளின் கல்யாணப் பத்திரிகை கொடுக்க இம்புட்டு கார்களா..? 50 கார்களுடன் கெத்தாக வந்த முன்னாள் எம்.எல்.ஏ..! JCB-யில் பூ மழை பொழிந்த ஆதரவாளர்கள்..!!

Published

on

பீகார் மாநிலம் மொகாமா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் பிரபல அரசியல் தலைவருமான ஆனந்த் சிங், தனது மகள் சிவாங்கியின் திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக பாட்னாவில் இருந்து பிரயாக்ராஜ் வரை மேற்கொண்ட பயணம் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் இருந்து சுமார் 50 ஆடம்பர கார்களுடன் தொடங்கிய அவரது பயணம், உத்தரப் பிரதேச எல்லைக்குள் நுழைந்ததும் ஆதரவாளர்களின் வருகையால் பிரம்மாண்ட அணியாக மாறியது. சந்தௌலி, ராம்கர் மற்றும் வாரணாசியைக் கடக்கும்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதில் இணைந்தன. பயணத்தின் போது சந்தௌலி பாஜக எம்.எல்.ஏ சுஷீல் சிங்கை சந்தித்து திருமணப் பத்திரிகையை வழங்கிய அவருக்கு, சந்தௌலி மற்றும் ராம்கர் பகுதிகளில் ஆதரவாளர்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் பூக்களை பொழிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பயணத்தின் போது வாரணாசியில் உள்ள டாபி டோல் பிளாசா அருகே, இவ்வளவு பெரிய வாகன அணிவகுப்பால் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆனந்த் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே பயணம் தொடர அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக, இரவு 8:30 மணியளவில் பிரயாக்ராஜ் வந்தடைந்த ஆனந்த் சிங், தனது 30 கால நண்பரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான பப்பு சல்மானின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு வெள்ளி கிரீடம் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பப்பு சல்மானிடம் தனது மகளின் திருமண அழைப்பிதழை அவர் வழங்கினார்.

Advertisement

பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆனந்த் சிங், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துடன் தமக்கு நீண்டகால குடும்ப உறவு இருப்பதால், லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார். இது முற்றிலும் ஒரு குடும்ப நிகழ்வு என்பதால் அரசியல் வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இத்திருமணம் வரும் நவம்பர் 25, 2026 அன்று மொகாமாவில் உள்ள அவரது சொந்தக் கிராமமான நத்வாவில் நடைபெறவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in