“இனி கலாம் காட்டிய பாதை..!” ராமேஸ்வரத்தில் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு…அலறும் தமிழக அரசியல் கட்சிகள்..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“இனி கலாம் காட்டிய பாதை..!” ராமேஸ்வரத்தில் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு…அலறும் தமிழக அரசியல் கட்சிகள்..!!

Published

on

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவுநாளையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அப்துல் கலாமின் உன்னதமான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ‘WE THE LEADERS’ அமைப்பைச் செம்மையாக நடத்திச் செல்ல முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கலாமின் நல்வழியில் தங்களது மக்கள் பயணமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதன் தொடர்ச்சியாக ஒரு முக்கிய அறிவிப்பையும் அண்ணாமலை வெளியிட்டார். அதன்படி, அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதியன்று, கோவையில் ‘CENTRE OF ETHICS IN POLITICS’ என்ற மையத்தைத் தொடங்கி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அரசியல் தளத்தில் நேர்மையும் அறநெறியும் சார்ந்த தலைமுறையை உருவாக்குவதே இந்த மையத்தின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in