LATEST NEWS
“அடப்பாவமே… யானைக்கு அன்போடு வெல்லம் கொடுத்த ஆட்டோ டிரைவர்!”.. அடுத்த வினாடியே நடந்த கொடூரம்… CCTV-யில் பதிவான நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ராஜ்நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, உஜ்ஜைனியிலிருந்து சாமியார்கள் சிலர் யானை ஒன்றை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பாகன் உமேஷ் அந்த யானையை அப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாகச் சென்ற ஆட்டோ டிரைவரான விஜய் ஹல்கர் என்பவர் யானைக்குச் சாப்பிட வெல்லம் கொடுத்துள்ளார்.
Elephant is not a Dog that will wag its tail for a biscuit in front of some Dog Lover. 49-year-old auto-rickshaw driver Vijay alias Laxman Rao Holkar from Indore died after elephant lifted and trampled him while he was tryin to feed jaggery to the elephanthttps://t.co/mA59Erm7Co— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) July 26, 2026
அப்போது எதிர்பாராதவிதமாகத் திடீரென ஆத்திரமடைந்த யானை, விஜய் ஹல்கரை மிதித்து கடுமையாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய யானை பாகன் உமேசை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
