என்னது… ஒரு பறவையின் விலை 3.85 கோடியா…?! அரபு நாட்டில் நடந்த பிரம்மாண்ட ஏலம்… வைரலாகும் அபுதாபி சிறுமியின் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது… ஒரு பறவையின் விலை 3.85 கோடியா…?! அரபு நாட்டில் நடந்த பிரம்மாண்ட ஏலம்… வைரலாகும் அபுதாபி சிறுமியின் வீடியோ..!!

Published

on

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச வேட்டையாடுதல் மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் அரிதான முற்றிலும் வெள்ளையான ‘அல்ட்ரா ஒயிட் பியூர் கயர் கர்மூஷா’ ரகத்தைச் சேர்ந்த இளம் வல்லூறு ஒன்று 1.5 மில்லியன் யு.ஏ.இ டிர்ஹாமிற்கு ஏலம் போயுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்க் மொக்லிச் ஃபால்கன் ஃபார்ம்’ என்பவரால் வளர்க்கப்பட்ட இந்த பறவை, அதன் தூய்மையான வெள்ளை நிற இறகுகள் மற்றும் தனித்துவமான உடலமைப்பால் ஏலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 1 கிலோ எடையும், 16.5 அங்குல நீளமும் கொண்ட இந்த வல்லூறு, ஏலத்தின் ஐந்தாவது சுற்றில் சாதன விலைக்கு விற்பனையாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், இந்த ஏல நிகழ்வின் போது ஷேக்கா அல் மன்சூரி என்ற சிறுமி தனது மாமாவுடன் கலந்துகொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், பறவைகள் மற்றும் வல்லூறுகள் மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பு குறித்து அந்த சிறுமி பேசுகிறார். அவரிடம் பறவைகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது யார் என்று கேட்டபோது, “எனது சித்தப்பா” என்று பதிலளிக்கிறார். அவருடன் இருந்த நநபரும் அவர்தான் அந்த சிறுமியின் மாமா என்பதை உறுதிப்படுத்துகிறார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcojLFxMhOn/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே அவருடைய மாமா இந்த ரூ.3.85 கோடி மதிப்பிலான அரிதான வெள்ளை வல்லூறை வாங்கிக் கொடுத்ததாக தகவல்கள் பரவின. இருப்பினும், அந்த வீடியோவில் சிறுமி பறவைகள் மீதான தனது ஆர்வத்தையும் அதை அறிமுகப்படுத்திய மாமாவைப் பற்றியும் மட்டுமே பேசியுள்ளார் என்பதும், அவர் அந்த விலையுயர்ந்த பறவையை வாங்கிக் கொடுத்தாரா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in