“நீங்களும் திமுக, அதிமுக மாதிரிதானா.?” – செவிலியர் பையில் CM விஜய் போட்டோ… தவெக அரசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீங்களும் திமுக, அதிமுக மாதிரிதானா.?” – செவிலியர் பையில் CM விஜய் போட்டோ… தவெக அரசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!!

Published

on

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய புதிய பைகளை அமைச்சர் விஜய் பாலாஜி சமீபத்தில் வழங்கினார். இந்த மருத்துவப் பைகளில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுத் திட்டப் பொருட்களில் அரசியல் தலைவர்களின் படங்களைப் பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் அரசு நலத்திட்டப் பொருட்களில் அப்போதைய முதலமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. தற்போது அதே பாணியை தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசும் கையில் எடுத்திருப்பது, “மாற்றம் தருவோம் என்று கூறிவிட்டு முந்தைய கட்சிகளைப் போலவே விளம்பரம் தேட ஆரம்பித்துவிட்டார்கள்” என்ற கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளது.

Advertisement

அரசுப் பணம் என்பது மக்களின் வரிப்பணம் என்பதால், அதில் விளம்பரம் தேடுவதைத் தவிர்த்துவிட்டு திட்டத்தின் தரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in