LATEST NEWS
“இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?” 3 மாதத்தில் ரூ.20,881 கோடி கடன்.. முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்..!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து வெறும் மூன்று மாதங்களில் ₹20,881 கோடி கடன் வாங்கியதுதான் முதலமைச்சர் விஜய் கூறிய மாற்றமா என்று திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஆட்சிப் பிடித்த முதல்வர் விஜய்யால், தற்போது தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் அவரது சொந்தத் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பட டிக்கெட் விற்பனையில் நடக்கும் முறைகேடுகளைக் கூடத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று சாடினார்.
மேலும், தற்போதைய அரசின் அமைச்சர்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது மக்கள் மற்றும் அரசுப் பணிகளை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு விளம்பரம் தேடும் வேலைகளில் மட்டுமே தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். மக்கள் நலனை விடத் திரைப்பட விளம்பரத்திற்கே இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.
