பெரும் சோகம்..! பயங்கரவாதிகளின் சிம்மசொப்பனம்… இந்தியாவின் முதல் “கருப்பு பூனை” தலைவர் நகரானி காலமானார்.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் சோகம்..! பயங்கரவாதிகளின் சிம்மசொப்பனம்… இந்தியாவின் முதல் “கருப்பு பூனை” தலைவர் நகரானி காலமானார்.!!

Published

on

தேசிய பாதுகாப்பு படையின் முதல் தலைமை இயக்குநரான ஆர்.டி. நகரானி (98) வயது மூப்பால் காலமானார். 1951-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான இவர், 1984 முதல் 1986 வரை என்.எஸ்.ஜி அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். இவரது தலைமையின் கீழ், சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் பிளாக் தண்டர்’ அதிரடி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னின்று நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ‘கருப்பு பூனைப் படை’ என்று அழைக்கப்படும் இந்த என்.எஸ்.ஜி, இந்தியாவின் மிக உயரிய சிறப்புப் பாதுகாப்புப் படையாக விளங்குகிறது. நாட்டின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், விமானக் கடத்தல் தடுப்பு மற்றும் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்படும் பிணைக் கைதிகளைப் பாதுகாப்பாக மீட்பது போன்ற அதிரடியான முக்கியப் பணிகளை இந்தத் தரைப்படை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in