LATEST NEWS
என்னப்பா இது.? கங்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக 14 பேர் கைது.. இதற்கெல்லாம் ஜாமீன் மறுப்பதா.? உச்ச நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்..!!
சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக ஒருவரை உடனடியாகக் கைது செய்வதும், அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கங்கை நதியில் படகில் பயணம் செய்தபோது சிக்கன் சாப்பிட்டு, அதன் எஞ்சிய எச்சங்களை ஆற்றில் வீசியதாக 14 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய மிகச் சாதாரணமான மற்றும் சிறிய விஷயங்களைக் கூட சட்டம் என்ற பெயரில் பெரிய குற்றமாக்கும் போக்கு தற்போதைய சமூகத்தில் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரியது என்று நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். தனிமனித உரிமைகள் மற்றும் தனிப்பட்ட உணவுச் சுதந்திரங்களை மதிக்காமல், தேவையின்றி ஜாமீன் மறுப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து அவர் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
