“மாமன் மச்சானுக்கு 5 ரூபா கூட GPay பண்ண முடியல” கதறிய அதிகாரிகள்… அமைச்சர் செங்கோட்டையன் போட்ட அதிரடி கண்டிஷன..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாமன் மச்சானுக்கு 5 ரூபா கூட GPay பண்ண முடியல” கதறிய அதிகாரிகள்… அமைச்சர் செங்கோட்டையன் போட்ட அதிரடி கண்டிஷன..!!

Published

on

அரசு அதிகாரிகள் தங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை அரசிடம் தான் முறையிட வேண்டுமே தவிர, வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைத் தீர்க்க தவெக அரசு எப்போதும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக, “வேலைப்பளு காரணமாக எங்களால் குடும்பத்தினரைக் கூட கவனிக்க முடிவதில்லை, சொந்த மாமன், மச்சானுக்கு ஜிபே-யில் (GPay) ஒரு 5 ரூபாய் கூட அனுப்பக் கூட நேரமில்லாமல் தவிக்கிறோம்” என்று வருவாய்த்துறை அலுவலர்கள் சிலர் குமுறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய அமைச்சர், அதிகாரிகள் தங்களது குறைகளைத் தகுந்த வழிகளில் அரசிடம் கொண்டு வர வேண்டும் என்றும், அதற்கான தீர்வுகள் நிச்சயம் எட்டப்படும் என்றும் அமைதியான முறையில் தனது ரியாக்‌ஷனை வெளிப்படுத்தினார்.

Advertisement

தொடர்ந்து, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட்டில், அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட்டில், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாகவும், உறுதியாகவும் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in