LATEST NEWS
“தோசையை திருப்புற மாதிரி ஆட்சி மாறிருமா…?” இன்னும் 10,20 பேர் ரெடியா இருக்காங்க.. தமிழக அரசியலில் புயலை கிளப்பிய செங்கோட்டையன்..!!
தாராபுரத்தில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அருண் என்று ஒருவரை எடப்பாடி தொகுதியில் நிறுத்தினோம். அவர் பெரிய பக்திமான் மாதிரி கையில் கயிறு, பச்சை வேட்டி கட்டிக் கொண்டு பழநிக்கு நடைபாதையாக சென்று விட்டு உங்களிடம் எம்எல்ஏ சீட் கேட்க வந்துள்ளேன் என்றார். நான் ஏமாந்தேன், அமைச்சர் அருண்ராஜூவும் ஏமாந்தார். ஆட்டோவுக்கு பின்னால் நிற்பது போன்ற போஸ் எல்லாம் கொடுத்தார். கடைசியில் பார்த்தால் சில்லரையை வாங்கிக் கொண்டு போயிட்டார். நான் ஏன் என்று சொல்கிறேன் என்றால் அவர் மட்டும் சும்மா நின்றிருந்தால் போதும். எடப்பாடி தோற்றிருப்பார், ஓட்டே கேட்க வேண்டாம் என்றார்.
அதன்பின்னர் அந்த சின்னத்தில் ரெண்டே நாள் ஒருத்தரை டிவி சின்னத்தில் நிறுத்தினோம். 58,000 ஓட்டு வாங்கிவிட்டார். 2 நாளில் 58,000 பேர் டிவிக்கு ஓட்டு போடுகின்றனர் என்றால், விசில் சின்னம் கிடைத்திருந்தால் என்னவாகி இருக்கும். ஒரே ஆண்டுகாலத்தில் ஆட்சி மாறும் என்று இபிஎஸ் கூறுகிறார். எப்படி மாறும்? 47 பேரில் 25 பேர் எங்களுக்கு ஓட்டு போட்டு விட்டனர். 7 பேர் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டனர். எப்படி ஆட்சி மாறும்? என்ன… தோசையை திருப்புவது மாதிரி என்று கேள்வி எழுப்பினார்.
இனி இதெல்லாம் சொல்லிட்டு இருந்தீர்கள் என்றால் இப்போது இருப்பவர்களும் போய்விடுவார்கள். தனிப்பட்ட முறையில் நான் சொல்கிறேன். ஒரு 10, 20 பேர் ரெடியாக இருக்கின்றனர். அது எப்போது என்று தெரியவில்லை. அதற்கு அப்புறம் தான் இவர்களுக்கு இருக்கிறது ஆபத்து. இவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர், மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து, பெரிய வெற்றியை கண்டு முதல்வராகி ஆட்சி நடத்தலாம் என்று கனவு காண்கிறார்கள் என அவர் பேசினார்.
